நினைத்து
நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வந்-தாய் ...
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
எங்கும் நிறை உலகின்
என் கண் நிறைப் பொருளாக
நீயே வியாபித்து நிற்கிறாய்
நிறையுற என் வாழ்வில்
பன்னிரு உறவுகளால்
என் குறை தீர்க்கின்றாய்
அம்மா என்ற உறவால்
இந்த உலகத்தை காண்கின்றேன் ...
என் பயணம் தொடங்குவது
உன் கருவறையில் இருந்து தானே
ஆம்;
அம்மா நீ ஜீவனை தந்-தாய் நீ
உடன் - தங்கையும்; தமக்கையும்
என் வாழ்வின் ஆதார சுருதிகள்
அந்நியமாக அல்ல அண்ணி யாய்
என் தாய்க்கு பின் தாயாகி நின்றாய்
இம்மை வாழ்வின் மறுபக்கம்
நீ மனைவியாய் - வந்தாய் - வாழ்வே நீ ஆகிப்போனாய்
மைத்துனியும் - மரியாதைக்கு உரியவலாய்
அத்தை - என் உறவுக்கு வித்திட்டவள்
மகள் - என் வாழ்வின் அர்த்தம்
பேத்தி - என் வாழ்வின் வரம்
பாட்டி - என் உறவுகளின் ஆணிவேர்
தோழி - என் வாழ்வின் சாட்சி யானால்
காதலி - என் வாழ்வின் பாக்கியம்
இப்படி யாதுமாகி நின்றாய் நீ
நீ - இன்றி இங்கு யாது உலகு
நீயே நான் படும் சங்கீதம்
ஆனாய் - என் வாழ்வின் சுப்ரபாதம்
என் வழிவின் வேறேதேனும் வந்தபோதும்
அன்பே உன்பாதங்கள் ரெண்டு போதும்
நின்னை சரணடைந்தேனடி தேவி
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வந்-தாய் ...
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னை நினைத்து உருகுகிறேன்
உள்ளத்தால் வியந்துபோகிறேன்
இன்னொரு ஜென்மம் உண்டானால்
நெருங்கி அருகில் வந்-தாய் ...
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
எங்கும் நிறை உலகின்
என் கண் நிறைப் பொருளாக
நீயே வியாபித்து நிற்கிறாய்
நிறையுற என் வாழ்வில்
பன்னிரு உறவுகளால்
என் குறை தீர்க்கின்றாய்
அம்மா என்ற உறவால்
இந்த உலகத்தை காண்கின்றேன் ...
என் பயணம் தொடங்குவது
உன் கருவறையில் இருந்து தானே
ஆம்;
அம்மா நீ ஜீவனை தந்-தாய் நீ
உடன் - தங்கையும்; தமக்கையும்
என் வாழ்வின் ஆதார சுருதிகள்
அந்நியமாக அல்ல அண்ணி யாய்
என் தாய்க்கு பின் தாயாகி நின்றாய்
இம்மை வாழ்வின் மறுபக்கம்
நீ மனைவியாய் - வந்தாய் - வாழ்வே நீ ஆகிப்போனாய்
மைத்துனியும் - மரியாதைக்கு உரியவலாய்
அத்தை - என் உறவுக்கு வித்திட்டவள்
மகள் - என் வாழ்வின் அர்த்தம்
பேத்தி - என் வாழ்வின் வரம்
பாட்டி - என் உறவுகளின் ஆணிவேர்
தோழி - என் வாழ்வின் சாட்சி யானால்
காதலி - என் வாழ்வின் பாக்கியம்
இப்படி யாதுமாகி நின்றாய் நீ
நீ - இன்றி இங்கு யாது உலகு
நீயே நான் படும் சங்கீதம்
ஆனாய் - என் வாழ்வின் சுப்ரபாதம்
என் வழிவின் வேறேதேனும் வந்தபோதும்
அன்பே உன்பாதங்கள் ரெண்டு போதும்
நின்னை சரணடைந்தேனடி தேவி
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வந்-தாய் ...
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னை நினைத்து உருகுகிறேன்
உள்ளத்தால் வியந்துபோகிறேன்
இன்னொரு ஜென்மம் உண்டானால்
என் உள்ளம் பெண்ணாக பிறக்க விளைகிறது
விளையாட்டாக அல்ல
ஆயிரம் மலர்களே மலருங்கள்
பெண்களே
நீங்கள் தானே என்றும்
நிறம் மாறாத பூக்கள்